அடுத்த நாள் நகரத்தினுள் இருக்கும் சில முக்கிய இடங்கள் இருக்கின்றன, நீங்கள் விரும்பினால் பார்க்கலாம் என ஹோட்டல் ரிசப்ஷன் பெண் கூறி, சில லிஸ்ட் தந்தார். இங்கு முக்கியமான விடயம் எதனையும் வற்புறுத்தமாட்டார்கள். எல்லாமே எங்க விருப்பம்தான். இதனை நாங்க உணர்ந்தோம். அதில் அரசமாளிகை (King Palace), Wat phnom Historical site, Combodian genoside இப்படி இன்னும் வேறு இருந்தது. இவை முக்கியமானவை நீங்கள் பார்க்கலாம் என சொன்னார் அப்பெண்.
இதில் நான் ஒரு விடயம் குறிப்பிடவேண்டும், என்னவெனில் என்னவருக்கு கம்போடியா நாட்டுக்கு போகனும் என முன்னாடியே விருப்பம்.ஆனா சரிவரல்ல. இப்போ முழுக்க அந்நாட்டுக்கான பயணமாக அமைத்தார்,ஏனெனில் அங்கோர்வாட் கோவில், அடுத்து அதன் வரலாறு அறியும் ஆவல். கொஞ்ச நாட்களா ஒரு மார்க்கமா தெரியுறார். தமிழின்தொன்மை, வரலாறு என தேடி தேடி படிக்கிறார். கீழடி எனும் புக் வாங்கியிருக்கிறார். இந்த கம்போடியாவின் வரலாறு அங்கு நடந்த இனபடுகொலை என மிகுந்த ஆர்வதோடு படித்துவைத்திருந்தார். அங்கு போய் இவைகளை பார்க்கனுமென இருந்தார். பார்த்தாச்சு. உண்மையில் பிரமிப்பாகதான் இருக்கு.
அந்த லிஸ்ட் ல தேவையானதை மட்டும்தெரிவு செய்து, நேரத்தினையும் கணக்கிட்டு 3 இடங்களுக்கு போக திட்டமிட்டோம்.
இந்நாட்டில் 90% கிமர்(Khmer) எனும் இனத்தவர்கள்தான். மொழியும் கிமர் மொழி.2 வது மொழி பிரெஞ்ச். பணம் என்னவோ Riel ரியல். ஆனால் டொலர் கொடுத்துதான் பொருட்கள் வாங்குவது.
முதலில் அரசமாளிகைக்கு போனோம். அங்கு போனால் எங்க Badluck அரசர் வருகையால் 9 மணிக்கு திறக்கப்படும் கதவு 2 மணிக்குதான் பார்வைக்கு திறப்போம் என காவலர் சொல்லிவிட்டார்.
இது வெளியில் இருந்து எடுத்தபடங்கள்......
அரசர் மாளிகைக்கு போகிறார்...........
எங்க நாட்டில் அரசரோ, பிரதமரோ, ஏன் மந்திரியோ வந்தால் TikTok பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? அந்நாட்டு பொலிஸ்காரர்கள்.
என்ன செய்வது என யோசித்து, அருகில் கம்போடியாவின் பிரபலமான ஆறு Mekong ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சூழலே ஒரு பீச் மாதிரி இருந்தது. கொஞ்சநேரம் அதில் கழித்துவிட்டு அடுத்த ப்ளான் செய்த இடத்துக்கு போனோம். இந்த இடத்தில் சில படங்கள் பார்வைக்கு......நாங்க திரும்ப 2 மணியளவில் வந்து அரசமாளிகையை சுற்றிபார்த்தோம்.
இதுதான் மேகொங் (Mekong)ஆறு. இந்த ஆறினால் அங்கு தண்ணீர் கஷ்டம் இல்லை. கிராமபுறம் போனால் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லா இடமும் வாய்க்கால், சின்னஓடைகள் ஊடாக இத்தண்ணீர் போகிறதாம். அங்குள்ளவர்கள் சொன்ன தகவல்கள். அதனால் அங்கு பசுமையாக இருக்கு.
இந்த இடத்தில் புறாக்களுக்கு அளவே இல்லை. எவ்வளவு புறாக்கள். எங்கிருந்துதான் வருகிறார்களோ தெரியாது. அங்கு ஹோட்டல் பக்கம் நான் ஒரு பறவையையும் காணவே இல்லை. ஆனா இங்கு ஒரே புறா மயம். ஆட்களுக்கு சரிசமமாக இருக்கிறார்கள். துளி பயமே இல்லை.காலை வந்து கொத்துவது , தலை சரித்து பார்ப்பது என உணவு கேட்கும் விதம் அலாதி.. பார்த்துக்கொண்டேயிருக்கலாம் சேட்டைகளை. கூடவே சிட்டுக்குருவிகளும். இவங்களை பார்க்க கோமதி அக்காதான் என் நினைவில் வந்தாங்க.
______________________________________________________
நான் எடுத்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் . நல்லாயிருக்கா

அரசமாளிகை உள்ளே.........
இந்த மாளிகைக்குள் அப்படி என்னதான் இருக்கோ..... பெரியஹால், புத்தர்சிலை. அவ்வளவுதான். ஆனா இதற்கு வாயில் காவலாளி பெரிய பில்டப் கொடுத்து கமரா, மொபைல் கொண்டு போககூடாது. படம் எடுக்ககூடாது என ஒரே சத்தம் போட்டார் அவர்கள் பாஷையில். ஆனால் அவர் கையில் வைத்துக்கொண்டு பேஸ்புக் பார்க்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் விடுவேனோ, எப்படியோ அவர்களுக்கு தெரியாமல் எடுத்துவிட்டேன் படம். கீழே இருப்பதுதான்....
அரசர் வேறோர் இடத்தில் இருக்கிறார். இங்கு வந்து போவாராம். ஏன் ,எதற்கு வாறார் என்று கேட்டால் விபரம் இல்லை. ஒருவேளை சொல்லக்கூடாதோ என்னவோ. ஆனால் அழகாக கட்டியிருக்கிறாங்க. பெரிய மாளிகையா, கோவிலா என தெரியாத அளவு கட்டியிருக்காங்க. வளவுக்குள் புத்த கோவில்கள் இருக்கின்றன. அங்கே ஓதுதல்களும், பாட்டும், மணியோசையும் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்குமாம்.
இதுதான் அந்த மாளிகை.
நல்ல அழகாக பராமரிக்கிறார்கள்.
இப்படி சின்ன சின்ன கோவில்கள் கட்டியிருக்கிறாங்க. என்ன அங்கு அடிக்கிற வெயிலுக்கு களைப்பு போக்க இருக்கலாம்.
படம் பார்த்து களைத்து போன உங்களுக்கு க்ரில் வாழைப்பழம் சாப்பிட்டுபோங்க. இது அங்கு அனேக இடங்களில் பார்க்கமுடியும். வாழைப்பழத்தை சுட்டுதருகிறாங்க. பிழைப்புக்காக என்னவோ புதுசுபுதுசா கண்டுபிடித்து விற்கிறாங்க. எனக்கு டேஸ்ட் பிடிக்கேல்லை.
இங்கு சிலவற்றை பார்க்கையில் பசும்பொன், அஞ்சு அடிக்கடி ஞாபகம் வந்தார்கள்.அதுவும் அஞ்சு சிலதை பார்த்தால் மயங்கியே விழுந்திடுவா. அப்படி இருக்கு .
ஹலோ....பசும்பொன் மெயின் பிக்சர் வர லேட்டாகும். பொயிங்ககூடாது. சரியா.