RSS

03/09/2015

மிதக்கும் சந்தையில்......

 Floating Market..
தாய்லாந்தில் இந்த மிதக்கும் சந்தை சற்று வித்தியாசமானது. இந்த மிதக்கும் சந்தை (Floating Market). Damnoen Saduak என்ற வாய்க்காலுக்கு இருமருங்கிலும் பெட்டிக்கடைகள் இருக்க, நடுவில் ஓடும் நீரோடையில் இந்த மிதக்கும் சந்தையில் வியாபாரம் பரபரப்பாக நடக்கின்றது. கால்வாய்க்கு இருமருங்கிலும் அமைந்த பெட்டிக் கடைகள், கூடவே கால்வாயில் பயணிக்கும் நீண்ட வள்ளங்களில் ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு அப்பாதையின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை பயணம் செய்வார். இந்த இடத்துக்குப் பொருட்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கே நிற்கும்  வள்ளங்களில் கட்டணம் கொடுத்து ஏறிப் பயணித்துக் கொண்டே எதிர்ப்படும் இந்த மிதக்கும் கடைகளில் பேரம் பேசிப் பொருட்களை வாங்குவார்கள். பழ வள்ளம், கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் வள்ளம், தாய்லாந்தில் தொப்பிகள் பிரபல்யமாக இருக்கு. கூடைத் தொப்பிகளை விற்கும் தொப்பிக்கடை வள்ளம், சைவ, அசைவ சாப்பாட்டுக்கடை வள்ளம் என விதவிதமான வள்ளங்கள்.


                                பேரம் பேசும் சுற்றுலா பயணி.
                              
                 
                            ஐஸ்கிரீம் விற்கும் வள்ளம்...
 
வாங்கிய ஐஸ்கிரீம்

எதிர்ப்படும் ஒவ்வொரு வள்ளக் கடைகளும் விதவிதமான பொருட்களோடு.........
                                 பழ(ங்கள்) வள்ளம்


இனிப்புப் பதார்த்தங்களை யார்தான் விரும்பமாட்டார்கள்.இதில் தாய்லாந்து மக்களும் விதிவிலக்கல்ல. தாய்லாந்தில் பிரபலமான வாழைப்பழ பான் கேக்.
                     
                                  கடையில் மாம்பழம்...


இது இன்னொரு பிரபல்யமான உணவு மாம்பழச்சாதம். Mango Rice with Coconut milk

                                அந்நாட்டு பழவகைகள்படகில் போகும்போது ஓரிடத்தில் நின்ற மாமரம் காய்களுடன்..
தொடரும்........

24 comments:

 1. இவ்வளவு பழங்களா ? சூப்பர் கடைசியில் மரத்துடன் மாங்காய் அழகு படங்களுக்கு நன்றி அக்கா ரொம்ப நாளா கமெண்ட் போடணும்னு நினைப்பேன் இன்னைக்கி தான் போடுறேன் இனி தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அதிகமான பழங்கள் இருக்கு அங்கு . வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   Delete
 2. அழகான படங்கள் நல்ல விளக்கவுரை அருமை ஆஹா தொடரும் ஸூப்பர்..

  தாய்லாந்தில் தொப்பிகள் பிரபல்யமாக இருக்குமா ?
  சகோ நம்ம வூட்டாண்டே காணோமே.... ?

  ReplyDelete
  Replies
  1. நானே இத்தனை படங்கள் எடுத்தாச்சேஏஏஏ எப்படி செலக்ட் செய்வது.... எனத்தெரியாமல் முக்கி, மூழ்கி ஒருமாதிரி செலக்ட் செய்து போட்டிருக்கேன். அதிலேயுமா..ஆவ்வ்வ்....
   அங்கே எங்கட ஊர்ல பனைஓலையிலே செய்து போடும் தொப்பி மாதிரி அனேகர் தலையில் இருப்பதை பார்த்தேன். வள்ளத்திலேயும் விற்றாக. வூட்டுகாரர் மிஸ் பண்ணீட்டாரா, நாந்தான் மிஸ் பண்ணினேனா தெரியல. இருக்குமாயின் போடுறேன்.
   வருகை தந்து கருத்தை பகிர்ந்தமைக்கு ரெம்ப நன்றி அண்ணா ஜி!!

   Delete
 3. அழகான படங்களும், விளக்கமும் அருமை பிரியசகி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி அக்கா

   Delete
 4. கண்கொள்ளாக் காட்சி பிரியா!..

  அத்தனை படங்களும் சொக்க வைக்கின்றன!...

  உங்களிடம் பயணக்கட்டுரை எழுதச் சொல்லலாம் எண்டு நினைக்கிறேன் பிரியா!
  அழகான படங்களுடன் அதற்கேற்ற விவரணமும்
  சேர்த்தால் பல பதிவுகள் தேறும்!
  உண்மையாகச் சொல்கிறேன். போகும் போதும் வரும் போதும்
  சந்தித்த மனிதர்கள், இடங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கங்கள்.. இப்படி.. இப்படி!..

  உங்கள் பதிவைப் பார்த்து அந்த நாடுகளுக்கோ அன்றி
  அந்த நிகழ்வுகளுக்கோ போவோர் எண்ணிக்கையும்
  அதிகரிகரிக்கும்!

  மாம்பழச் சோறு வித் கோகனற் மில்க்..
  ஸ்ஸ்ஸ்ஸ்... சூப்பரா இருந்திருக்குமே!..

  அத்தனையும் அருமை பிரியா!
  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கவியரசி வாங்க. உங்களை மாதிரி கவிதைதான் எழுத வரல்ல. சரி கட்டுரையாவது எழுதலாமேன்னுதான். இது நல்லா இருக்கு என்னால் அந்நாட்டுக்கு அந்நிய செலவாணி கொஞ்சம் கூடட்டும். என்ன எல்லாமே ஸ்வீட்தான். சூப்பர்தான் ரைஸ். மிக்க நன்றி இளமதி வருகை தந்து நீண்ண்ட கருத்தளித்தமைக்கு.

   Delete
 5. மிதக்கும் சந்தையை சுத்திசுத்தி பார்த்துட்டோம் ! பழங்கள் எல்லாம் ஃப்ரெஷ்ஷா இருக்கு. அந்த ஊர் சர்க்கரைப் பொங்கல் இனிக்குது. படங்களைப் பார்க்கும்போதே சாப்பிட ஆசையா இருக்கு.

  அது என்ன ப்ரியா இளநீர் ஐஸ்க்ரீமா !! இங்க வெயிலுக்கு ரெண்டு அனுப்பியிருக்கலாமே.

  கொய்யா பழம் பக்கத்துல அது என்ன புளியம்பழமா ? 'வள்ளம்'னா கடையா? அல்லது இடமா ? நேரம் இருக்கும்போது வந்து சொல்லுங்க. நன்றி ப்ரியா !

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா ஒருவழி நீங்களும் சுத்திபார்த்தீங்களா. மகிழ்ச்சி. எனக்கு பிடித்ததே பழங்கள்தான். நிறைய. தூரியன் பழம்,சீத்தாப்பழம்,கொய்யா,மங்குஸ்தான்,ரம்புட்டான் என சாப்பிட்டாச்சு. இளநீர் வெட்டி வழுக்கையினுள் ஐஸ்கிரீம்.இது உள்கடையொன்றில் வாங்கி(வள்ளத்தில் விற்பதை பார்த்துவிட்டு) அங்கேயிருந்து சாப்பிட்டது. இவ்வள்ளத்தில் சுற்றிப்பார்த்தது மட்டுமே. ஒன்றும் வாங்கவில்லை. மிஸ் செய்தாச்சு அடுத்தமுறை வாங்கி அனுப்புறேன் சித்ரா. உங்க வெயிலை இங்க அனுப்புங்க. மழை ஒரேயடியாக கொட்டுகிறது.
   வள்ளம் என boat ஐ சொல்வது நாங்க.
   ஆவ்வ்வ் சர்க்கரைப்பொங்கலா...ம்ம்.ம் சர்க்கரைப்பொங்கல் மாதிரிதான் ஒரே இனிப்பு.
   யெஸ்.. புளியம்பழமேதான். அவ்வளவா புளிக்கல. அதையும் விட்டுவைக்கல. கேள்விக்கெல்லாம் பதில் கிடைத்ததா....

   Delete
 6. ஓ, மறந்திட்டேனே, இன்னும் ஒரே ஒரு கேள்வி :)

  படகு ஓடும் தண்ணீர் எப்படி சுத்தமா இருக்கா ?

  ReplyDelete
  Replies
  1. தண்ணீரிலேயே காய்கறி தோல் மிதக்கிறது.தண்ணீர் அதே நிறம்தான். அருவருப்பில்லை. அசிங்கமில்லை. நல்லாயிருக்கு.இது பாங்காக் லிருந்து 100கி.மி தூரம். நீண்டு போகிறது. ரெம்ப நன்றி சித்ரா.

   Delete
 7. வணக்கம் அம்மு எப்படி நலமா இருக்கீங்களா ?

  தாய்லாந்து எல்லாம் போய்வந்தாப்ல இருக்கே படங்களைப் பதிவேற்றி மிதக்கும் சந்தையைக் கண்முன் காட்டியதற்கு நன்றிகள் பிரியசகி !
  வாழ்க வளமுடன்

  நேரம் கிடைத்தால் அடிக்கடி வருவோம்ல

  ReplyDelete
  Replies
  1. நலம் சகோ. நேரம் கிடைத்து வந்து கருத்தளித்தமைக்கு நன்றி.

   Delete
 8. சந்தைனாலே நமக்கு ரொம்ப பிடிக்கும் ..இதுல தண்ணிர்லேயே சந்தையா சூப்பர் .... படங்களும் அழகு

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றி அனு வருகைக்கும்,கருத்துக்கும்.

   Delete
 9. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் !
  பிரியசகி மோதக கொழுக்கட்டை செய்தால் பார்சல் அனுப்புங்க.

  ReplyDelete
  Replies
  1. தாமதமான நன்றிகள் அக்கா..!

   Delete
 10. இப்பொழுதுதான் முழுவதும் படித்தேன் அம்முலு, சூப்பரோ சூப்பர், போகும் ஆசையைத் தூண்டி விட்டுவிட்டீங்க... அத்தோடு அங்கு பொருட்கள் மலிவாமே? அக்கா குடும்பம் போனவர்கள் முன்பு.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அதிரா. பொருட்கள் மலிவாக வாங்கலாம்.நிறைய பழங்கள்<எலக்ரொனிக் பொருட்கள் (ஒரிஜன்ல்,டூப்ளிக்கேட்) மார்க்கன் பொருட்கள் வாங்கலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் போய்வாங்கோ. வந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் அதிரா.

   Delete
 11. இந்தப் பிரிய ஸகி யார் என்று அறிய வந்தேன். தாய்லந்துக்கு வள்ளம் என்பதையும் அதன் விவரங்களையும் அறிய வைத்து விட்டீர்கள். நன்றாக இருந்தது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மா. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு உங்க வரவு.
   வந்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

   Delete
 12. தாய்லாந்து மிதக்குக் சந்தை கண்கொள்ளாகாட்சி. நானும் கண்டு களித்தேன் அம்மு.

  ReplyDelete

 
Copyright பிரியசகி