RSS

01/10/2012

வேலியும், மரங்களும்

                                                   
        ஊரில வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கோ இல்லியோ,வேலிகள்,மதில்கள் கட்டாயம் இருக்கும். பக்கத்து வீட்டுக்கோ, அல்லது காணிகளுக்கோ  எல்லையாக போட்டிருப்பார்கள் .

       கல்லை வைத்து கட்டி மதில் ( சுவர்) எழுப்பியிருப்பார்கள் . அல்லது  தென்னோலை (இதை கிடுகுவேலி என்றும் சொல்வோம்.), பனையோலை, அல்லது தென்னமட்டை,  பனை மட்டை அல்லது தகரம் இப்படியான பொருட்களை  வைத்து வேலி கட்டியிருப்பார்கள்.
ஊரில் எல்லையில்  வேலிபோடுவதில் , கதியால் போடுவதில் சில இடங்களில்  எல்லைச்சண்டை  அநே(அமோ)கமாக நடந்திருக்கு.  வெட்டு,குத்து கூட    நடந்திருக்கு. 

                       1. செங்கற்கள் ,2 சிமெந்து ,3.தென்னோலை,4.பனைமட்டை 
  


                                          இது ஊரில் எங்க வீட்டு வேலி
                        
       நான் இருக்கும் நாடானா ஜேர்மனி யில்  சில இடங்களில் கற்களால்,கம்பிகளால்,பலகையால் ஆன வேலி மாதிரி  மறைப்புகள்  உண்டு.   ஆனால்  கூடுதலாக மரங்களையே  எல்லைகளில் வைத்து (வேலியாக) வளர்க்க விரும்புவர். இங்கு இரண்டு காலநிலை இருப்பதால் அதற்கேற்றவாறு மரங்கள் இருக்கின்றன.குளிர்காலத்திலும்   இலைகள் பச்சையாகவே இருக்கும் மரங்கள்  இருக்கின்றன.  கூடுதலான குளிர் என்றால் பாதிப்பு வரத்தான் செய்யும். 

       எங்களுக்கும் இந்த எல்லையில் மரம் வளர்க்கவேண்டிய சூழ்நிலை வரும்  என நினைத்திருக்கவில்லை.

      எங்கள் வீட்டுக்கு  2 பக்க‌த்தில் மட்டுமே வீடுகள். மற்றைய 2 பக்கமும் வீதி.(road).  அதனால் எங்களுக்கு 2 பக்கம்தான் (corner land) மரங்களை எல்லைகளில்   வளர்க்க வேண்டியிருந்தது .   இங்கு பல வகை மரங்கள் இருக்கு.  நாங்கள் தெரிவுசெய்தது  3 மரங்கள்தான்.  அவை குளிர்காலத்திலும் பச்சையாக இருக்கும்.

                1.lebens baum(tree of life)  2.buche(beech tree)  
                 3.buchsbaum(boxwood)  4.lorbeer.(laurel)                                                                                                                

**இரண்டாவது படத்தில் இருக்கும் மரத்தின் இலைகள்  வின்டருக்கு   கொட்டிவிடும். அது பக்கத்துவீட்டுக்காரர் வைத்தது.  

**1,வது 3,வது 4 வது படத்தில் இருக்கும் மரங்கள்  இருகாலத்திலும் பச்சையாகவே  இருக்கும்.

                                                   
                               இந்த  மரம் மட்டும் சிவப்பாகவே எப்பவும் இருக்கிறது.



 
இங்கு Buchsbaum(boxwood)  ஐ  (3 வது  படம் ) வளர்த்து சில பேர்  
டிசைனாக வெட்டி விடுவார்கள்.

                                         அழகான பூஸ் 
                                                   
                      அந்த மரத்தில்  வெட்டப்பட்ட சில டிசைன்கள்  
                                                              
                               tks,gg
                   
                நாங்கள் வீட்டின் முன் பக்கம் நட்டவை LEBENS BAUM 

                                     இதுதான்  எங்கள்  வீட்டின் முன் வாசல் 
                                                               
       இங்கு வீட்டில்(காணியில்) இருக்கும் மரமென்றாலும், வெளியில்  இருக்கும் மரம்  என்றாலும்  வெட்டுவதாயின்  அனுமதி பெறவேண்டும்.(வீட்டினுள் சின்னதாக இருக்கும்  மரங்களிற்கு இல்லை.)  இங்கு கூடுதலாக  மரங்களை வளர்த்து, தங்கள் வீட்டை  அழகாக வைத்திருப்பார்கள் . மரங்கள் வளர்ப்பது  அழகாக இருக்கும். இங்கு மரத்தை வைத்துவிட்டு  அப்படியே விடமாட்டார்கள். அதற்கு தேவையான உரங்கள், மருந்து வாங்கி போட்டு பராமரிப்பார்கள். இதனால உழைக்கும் காசில ஒரு பகுதியை இதற்கு செலவழிப்பதற்கே வைத்திருப்பார்கள். அந்தந்த மரங்களுக்கென கார்டன் இருக்கு. supermarket லும் வாங்கலாம்.  

    இனி ஒக்டோபர் மாதத்தில் வரும்  autumn (herbst) லீவில், காணியில் இருக்கும் மரங்கள் கொட்டுகிற  இலைகள்,சருகுகளை  கூட்டி துப்பரவாக்குவார்கள். பின்பு மறுபடியும் ஏப்ரல் மாதத்தில் அல்லது மே மாதத்தில்  செய்வார்கள். இது இம்மாதங்களில்  இருக்கும் குளிரைப் பார்த்து செய்வார்கள். அத்துடன்  மரங்கள் இருப்பதால்  நிறைய பறவைகள் வரும் . சிலர் பறவைகள் வரவேண்டும் என்பதற்காக அவைகளுக்காக விற்கப்படும்
சாப்பாட்டுவகைகளை  வாங்கி வைப்பார்கள். விண்டர்காலத்தில்தான் கூடுதலாக உணவுவகைகளை வைப்பார்கள்.  இவைகளுக்கெல்லாம் நானும் விதிவிலக்கல்ல. 

                              நான் வாங்கி வைத்திருக்கும்  குருவிக்கான சாப்பாடு 

    இனிவரும்  மாதங்களில்  இந்த பச்சைக்கலரைப்பார்க்க முடியாது.  அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே  வரை காத்திருக்க வேண்டியதுதான்.  குளிர் கொஞ்சம் ஆரம்பிக்கிறது. இலைகள்  மஞ்சள்,சிவப்பாக  வரத்தொடங்கிட்டுது.

*****************************************************
இதில் வீட்டின் முன் பக்கம் நட்ட மரங்களில்  2 மிஞ்சிவிட்டது (மிகுதி).  கணவர்  என்ன செய்வது என கேட்டார் . நான் கராஜின்  பின்பக்கத்தில்   வைக்கலாம் என்று சொல்லி, மரத்தை நட்டுவிட்டோம். அவை இப்ப இப்படி வளர்ந்து  நிற்கினம். இவைகளிற்கு நான் வைத்த பெயர் TWIN TOWERS.

 

                   இதுதான் எங்க வீட்டு TWIN TOWERS
                                             கராஜ் பின்பக்கம்.
            பச்சைக்கலர்ல இருப்பது மழை நீரை சேகரிக்க ஒரு Tank
****************************************************

        “ஏம்பா காலையில வர்ற பேப்பரை
         சாயங்காலம் வாங்கறே?”


        “சூடான செய்திகள்னு போட்டிருந்தாங்க.
         அதான் ஆறட்டுமேன்னு...”



€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€
   "ஒரு பிரச்சனையைத் தீர்க்கமுடியாவிட்டால்,              
     பிரச்சனையை    சமாளிக்கக்கற்றுக்கொள்ளுங்கள் "
 €€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€€



                              நீங்களும் இப்பாட்டைக்கேளுங்க



 

 
Copyright பிரியசகி