RSS

20/08/2014

அசத்தலாமே சமையலில்..

இப்பதிவில் இணையத்தள  நண்பிகளின் சமையல் குறிப்புகளை பகிர்கின்றேன். இவர்கள் கொடுத்திருந்த சமையல் குறிப்புகளை நான் செய்திருக்கிறேன். இன்னமும் செய்கிறேன்.  குடும்பத்தினருக்கும், விருந்தினர்களுக்கும் நண்பிகளின் குறிப்புகளிலிருந்து செய்து கொடுத்து, பாராட்டை பெற்றிருக்கிறேன் என்றால் இவர்கள் குறிப்புகள்தான் காரணம். இதை பகிர்வதன் மூலம் நல்ல குறிப்புகளை தந்த அவர்களுக்கு என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
                                 *******************
         ஆஹா என்ன ருசி அஞ்சுவின் ரெசிப்பி 
  கோதுமைத்தோசை All time favorit food. இப்போ உளுந்து
  தோசைக்கு பதில் இதுதான்.
                                         தக்காளி தோசை
 குணுக்கு ஏற்கனவே பகிர்ந்திருக்கேன். இது டேஸ்டியான ஸ்நாக்ஸ்.
                       அஸ்பாரகஸ் /கேரட் பொரியல்
இது இம்முறை வாங்கிசெய்திருந்தேன். நன்றாக இருந்தது.
சீசன் காலத்தில் மட்டுமே செய்யலாம்.
மகியின் குறிப்பான வெங்காய வடகத்தை அஞ்சு செய்திருந்தாங்க. அவங்க செய்ததை பார்த்து, ஓர் ஆர்வ(ம்)த்தில் செய்தது.அத்துடன் அப்போ இங்கு நல்ல வெயிலும் கூட.  நான் செய்த வடகம் இவை.
                                  பொரித்தபின்
                             ***************
ஆசியாவின் சமையலையும்  அசத்தலாமே அருமையா 
 ஆசியாவின் குறிப்புகளில் இருந்து நான் செய்தவை.
                                         சோயா வடை 
ஆசியா சிறப்பு விருந்தினர் என்கிற பகுதியையும் செயல்
படுத்துறாங்க.அதில் மேனகா சத்யா கொடுத்திருந்த
செட்டிநாடு வெஜ் புலாவ்  செய்திருந்தேன்.  ருசி அபாரம்.
இன்னொரு சிறப்பு விருந்தினரா அறிமுகப்படுத்தியிருந்த 
சங்கீதா செந்திலின் குறிப்பான சாத பக்கோடா செய்திருந்தேன் .
அருமையான ,ஈசியா செய்யக்கூடிய ஸ்நாக்ஸ். வார இறுதி 
நாட்களில் செய்வேன்.
                                         சாத பகோடா
                            சாதம் மீந்திருந்தால் சுலபமா செய்யலாம். 
 இது ஆசியாவின் சமீபத்திய குறிப்பு 3இன் 1 
       Strawberry milkshake/ lassi / Strawberry,
       Banana Smoothie
இது  சீசன் டைமில் குறிப்பை வெளியிட்டிருந்தாங்க. நானும் உடனேயே செய்திருந்தேன்.  3ன் 1 சூப்பர்.(link)
                          
                          பீட்ரூட் ஓணம் பச்சடி//காலிப்ளவர்65
 பீட்ரூட்(link)
காலிப்ளவர்65 (link)
*************************************************************
                           கிர்ணி பழ மில்க்‌ஷேக்
  மகியின் குறிப்புகளும் மறக்காமல் செய்தேன்
ஈஸி கொண்டைக்கடலை கத்தரிகுழம்பு.
வாழைக்காய் கறிப்பொடி.
இதை நான் முதலில் ஆர்வத்தில் உருளைக்கிழங்கில் செய்தேன்.
இப்போ  வாழைக்காயிலும் செய்துவிட்டேன்.
டேஸ்ட் நன்றாக இருக்கு.
இப்பொடியை  செய்து வைத்திருக்கேன். ஏதாவது செய்தால் அவசரத்திற்கு உதவுகிறது. மிக்ஸ்ட் வெஜிடெபில்ஸுக்கும் போட்டேன்.நன்றாக இருந்தது.
                          உருளை-குடைமிளகாய் மசாலா
                                  ஆனியன் பப்ஸ்
                           ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
 உமையாள்காயத்ரியின் குறிப்பு வெண்டிக்காய் ப்ரை.
வித்தியாசமான டேஸ்ட். குழம்பு,சாம்பார்,பச்சடி என்றுதான் செய்திருக்கிறேன். இப்படி செய்ய நன்றாக இருக்கு.
                                  வெண்டிக்காய் ப்ரை
                *******************************************
என் சிறுவயதிலிருந்து, இன்றுவரைக்கும் நட்புடனிருக்கும் 
அன்பு நண்பியின் பிறந்தினத்திற்காக செய்த கார்ட்.
                      *******************************************************
 நன்றிகள், நன்றிகள் ஓராயிரம் நன்றிகள்.....
இத்தளம் இப்போ ஆரம்பித்த மாதிரி இருந்தது. அதற்குள் இரண்டு வருடம் பூர்த்தியாகி 3ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறேன்.இன்றளவும் ஓரளவு பதிவுகளை (34) எழுதி, 65 பேர் என் பக்கத்தை தொடருகிறார்கள் என்றால் அதற்கு, ""நீங்களும் பதிவு எழுதுங்கோ,"" என்று சொன்னதோடு நின்றுவிடாமல், இத்தளத்தை உருவாக்கித்தந்து,  ஊக்கப்படுத்திய எங்கள்  பூஸார், ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அவருடன் ஊக்கம் கொடுத்து,"பிரியசகி" என பெயரை தேர்வு செய்த அஞ்சு, ஊக்கம் தந்த இமா,இளமதி ஆகியோருக்கும் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் என் தளத்துக்கு வருகை தந்து, தங்கள் கருத்துக்களை தெரிவித்து என் பக்கத்தை தொடரும் அனைத்து அன்பான உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் இதயம் நிறைந்த நன்றிகள். என் பதிவுகளில் ஏதேனும் குறைகள்,பிழைகள் இருப்பின் அதனை தெரியப்படுத்தவும்.திருத்திக்கொள்ள ஏதுவாக அமையும். 
உங்கள் அன்பான ஆதரவுக்கும்,ஊக்கத்திற்கும் மீண்டும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
                                         _()_  _()_  _()_



35 comments:

  1. இப்போ தான் பார்த்தேன் ... அழகா செய்து அதை போட்டோவும் எடுத்து கண்ணை கவரும் விதமாக போட்டு இருக்கீங்க ... வாழ்த்துக்கள் பிரியசகி .....
    இதில் என் ரெசிபியும் இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி ....
    உங்க சமையல் லிஸ்ட் ல இருந்து நானும் எனக்கு பிடிச்ச ஐட்டத்த சுட்டுகிட்டேன் ...:D :D

    ReplyDelete
    Replies
    1. வாங்க சங்கீதா. ரெம்ப நாளா காணோம்.நலம்தானே. இது எப்பவோ போட வேண்டிய பதிவு. மிகவும் லேட். நேற்று உங்க பகோடா செய்திருந்தேன். சூப்பர். நன்றி உங்களுக்கு.
      பார்த்து செய்துவிட்டு, அவங்களுக்கு கருத்தை பதிவு செய்யுங்க சந்தோஷப்படுவாங்க.
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள்

      Delete
  2. வணக்கம்
    பார்த்தவுடன் பசி வந்துவிட்டது என்ன சமையல்... நல்ல விளக்க குறிப்புடன் பகிர்ந்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. வருகை தந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

      Delete
  3. மூன்றாமாண்டு தொடக்கத்துக்கு வாழ்த்துக்கள் தோழி!படங்கள் ஒவ்வொன்னும் நாவில் நீர் ஊரசெய்கின்றன. தொடக்கத்திலும் முடிவிலும் இருந்த க்வெல்லிங் அசத்தல் தோழி! நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்துபார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகை மகிழ்ச்சியளிக்கிறது. நிச்சயம் க்விலிங் செய்யுங்க. வந்து கருத்து பகிர்ந்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றி தோழி.

      Delete
  4. //இத்தளம் இப்போ ஆரம்பித்த மாதிரி இருந்தது. அதற்குள் இரண்டு வருடம் பூர்த்தியாகி 3ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறேன்.//

    சுவையான பதிவு. மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள் ...... அம்முலு.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள்
      அண்ணா.

      Delete
  5. wowwwwwww!!! :)) என் சமையலை செய்து பார்த்து ரசித்து ருசித்த ப்ரியாவுக்கு தாங்க்ஸ் :)

    அந்த கோதுமை தோசை செம டேஸ்ட் !!
    அந்த தக்காளி தோசைக்கு பக்கத்தில் கிண்ணத்தில் மிளகாபொடியா ப்ரியா?
    அப்படியே தட்டை பார்சல் பண்ணுங்க :)
    மிக அருமையான பகிர்வு
    செய்துபார்த்து அனைவருக்கும் நன்றி சொனதர்க்கு மிக்க நன்றி
    அப்புறம் க்வில்லிங் தனி போஸ்டாக போடுங்க .தனியே அழகை ரசிக்க ஆவல் :)
    மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) சும்மா இருந்த ஃபிஸ் ஐ.. சே..சே.. டங்கு ஸ்லிப்.. :) சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக்கிடக்கே... :) எதுக்கு இந்த வேலை அம்முலுவுக்கு:)..

      Delete
    2. அஞ்சுவுக்கும் என் நன்றி!

      Delete
    3. அதாரது இடையில் புகுந்து க்யூவரிசை குழப்புவது!!!!!!!
      அட!!!!!! அதிராஆஆஆ. இங்கு அதான் ஓரே குளிர்ர்ர்ர்.
      //சும்மா இருந்த ஃபிஸ் ஐ.. சே..சே.. டங்கு ஸ்லிப்.. :) சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாக்கிடக்கே... :) எதுக்கு இந்த வேலை அம்முலுவுக்கு:)..// உங்க ஊரில ஓரே தூசியா இருக்கு எழும்பி தட்டச்சொல்லித்தான்.

      Delete
    4. வாங்க அஞ்சு. உங்க கோதுமைத்தோசை இங்கு நண்பர்களுக்கும் சொல்லி செய்தாச்சு.இப்ப ஊருக்கும் வீட் அனுப்பியிருக்கு செய்யச்சொல்லி. உளுந்து தோசை செய்வது இல்லை என்றே சொல்லலாம். அவ்வளவு பிடித்தம் வீட்டில். உங்களுக்குதான் நன்றி.
      யா. அது மிளகாய் பொடியேதான். 2வது சட்னி.
      க்விலிங் தனிபோஸ்ட்தான் போடனும். ரெம்ப நன்றி அஞ்சு வாழ்த்துக்கும், கருத்துபகிர்விற்கும்.

      Delete
  6. இவ்ளோ குறிப்புக்களோஓஒ எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ.. நான் ஃபெயிண்ட் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :0
    [im]http://1.bp.blogspot.com/-H9yDi8vsKA4/TluECUtGkFI/AAAAAAAACGg/uTI0TR4ODT4/s400/IMG_0487.JPG [/im]

    ReplyDelete
    Replies
    1. நான் இப்பதான் பார்க்கிறன் "கண்ணைத்திறந்து கொண்டு ஃபெயிண்ட் ஆகிற ஆட்களை

      Delete
  7. எழுத்துக்களுக்கான கலர் கோர்டிங் மறந்திட்டேன், நினைவிருந்தா கொஞ்சம் சொல்லுங்கோ அம்முலு..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. முதல் இரு வருடங்களையும் விட இன்னும் ஸ்பீட்டா பதிவுகள் போட வாழ்த்துக்கள் (என்னப்போல:))..

    ReplyDelete
    Replies
    1. நன்றி,நன்றி அதிரா. ஏதோ உங்க தயவுலதான் இவ்வளவும் என்னால இயன்றளவு கொண்டு செல்கிறேன். நீங்க very busy ஆகிட்டீங்க. மிக்க நன்றி அதிரா.

      Delete
  9. சமையலில், குயில் வேலையில்:) நீங்க எங்கயோ போயிட்டீங்க.. அஞ்சு எல்லாம் எந்த மூலைக்கு:)).. ஹையோ வைரவா மன்னிச்சுக்கோங்க.. அடிக்கடி டங்ஸ்ஸ்ஸ் ஸ்லிப் ஆகுதே.. நான் எல்லாம் எந்த மூலைக்கு எனச் சொல்ல வந்தேன்ன்.. சரி இதுக்குத்தான் நான் இப்போ எங்கயும் போறதில்லை:) போனால் என் வாய் சும்மா இருக்காதாம்ம்.. வரட்டா அம்முலு.. மீண்டும் இன்னொரு இனிய ஆண்டில் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து இனிதே விடை பெற்றுச் செல்பவர்.. புலாலியூர்ப் பூஸானந்தாஆஆஆஆஆஆஆ....

    ReplyDelete
    Replies
    1. //சமையலில், குயில் வேலையில்:) நீங்க எங்கயோ போயிட்டீங்க.. அஞ்சு எல்லாம் எந்த மூலைக்கு:))..// சமையலில் ஏதோ நண்பிகளின் உதவியால் செய்ய முடிகிறது. க்விலிங்??? அஞ்சுவை மிஞ்சமுடியாது. நிறைய கற்றுக்கொள்ள இருக்கு. இன்ரெஸ்ட் இருக்கிறதால செய்கிறேன் அதிரா. மிகவும் சந்தோசம் அதிரா நீங்க வந்து இவ்வளவு கலகலப்பா கருத்து அளித்ததற்கு. உங்க கறி ரொட்டிதான் மிஸ்ஸாயிட்டு. பார்ட் 2 வில கண்டிப்பா செய்து போடுறேன். உங்க வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் உங்க கருத்துக் களுக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  10. அன்புத் தோழி அம்மு!

    ஆண்டுகள் தானிரண்டை ஆர்வமாய்த் தாண்டியே
    வேண்டினீரோ மூன்றை விரும்பியே! - ஈண்டு
    விருதுகள் கிட்டட்டும்! மேன்மையும் ஓங்கப்
    பெருமைகள் காண்பீரே பெற்று!

    உள்ளம் உவக்கவே ஊட்டினீர் நன்றாக!
    வெல்லமே உன்மனம் வேறில்லை! - நல்லவர்
    எண்ணம் உளத்தினி(ல்) என்றும் நிலைக்குமே!
    இன்னுமின்னும் தாரும் இனிப்பு!

    பெண்னுன்றன் ஆற்றலைப் பேறுகள் தானென
    உன்னருமைக் கண்ணாளன் ஓதுவர்! - என்னே
    திறமை! இயற்றுகிறீர் சீராக! மேலும்
    சிறந்திடுவீர் வாழ்வில் செழித்து!

    அனைத்தும் அருமை என்றால் போதாதே… மேன்மை!!!

    பெருகட்டும் நின் புகழ்!
    வாழ்க வளமுடன்!

    வாழ்த்துக்கள் அன்புத் தோழியே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி. உங்களை காணக்கிடைக்கேலை. இப்படி வெண்பாவில் வாழ்த்தினால் பதிலுக்கு நான் என் செய்வேன். மிக சந்தோஷமாக இருக்கு. மிக்க நன்றி இளமதி வந்து வாழ்த்தியமைக்கு.

      Delete
  11. வாழ்த்துக்கள் தோழி,இப்போ தான் ஏஞ்சலின் லிங்க் மூலம் பார்த்து வந்தேன்..இதில் என் குறிப்பும் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி,அனைத்தையும் பொறுமையா செய்து படம் போட்டிருக்கீங்க,பாராடுக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சத்யா. உங்க பிரியாணியும் மிகமிக டேஸ்ட். படங்கள் முதல்தடவையிலே எடுத்தது. பிரியாணியும் 2,3 தடவை செய்தாயிற்று. ரெம்ப நன்றி சத்யா வருகை தந்து கருத்தளித்தமைக்கு.

      Delete
  12. ஆஆங் !! :) சொல்ல மறந்து விட்டேன் ப்ரியா ..எங்களுக்கு இன்னமும் ஸ்கூல் விடுமுறை செப்டம்பர் தான் திறக்கறாங்க ஆனா ஒருத்தருக்கு ஸ்கூல் ஆரம்பிச்சாச்சே :) அவர் பெயர் அவன்னா வில் துவங்கி ராவன்னாவில் முடிகிறது கோடிட்ட இடத்தில தி போட்டுக்கோங்க .
    அப்புறம் முக்கியம் கூகிளில் தேடும்போது அந்த அருகூட்டு தோச ,பூஸ் ஒட்டி.marakkari rotteee இதெல்லாம் பாக்கவே பாக்காதீங்க :)
    ஹெல்த் அன்ட் சேப்டி அட்வைஸ் :)))))

    ReplyDelete
    Replies
    1. ஆஆ இங்கும் ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு. குளிரும் வந்தாச்சு. அவராஆஆஆ நான் கண்டுபிடிசுட்டேன்.
      //அப்புறம் முக்கியம் கூகிளில் தேடும்போது அந்த அருகூட்டு தோச ,பூஸ் ஒட்டி.marakkari rotteee இதெல்லாம் பாக்கவே பாக்காதீங்க :)
      ஹெல்த் அன்ட் சேப்டி அட்வைஸ் :)))))// இதைப்பார்த்தாங்க அவ்வளவுதான் நீங்க. எதுக்கும் கவனமா இருங்க.

      Delete
  13. மூன்றாம் ஆண்டுக்கு வரவேற்பு.

    ஆகா...பொருமையாக எல்லோருடைய சமையலையும் செய்து ரசித்து ருசித்தமைக்கு எல்லோர் சார்பாகவும் நன்றி.

    அதை அழகாய் புகைப்படத் தொகுப்பாய் வெளியிட்டமை அழகு.

    வல்லவர்கள் உள்ள இடத்தில் என்னுடைய சமையலையும் வெளியிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க உமையாள். உங்களோடது ஒன்றுதானே என நினைக்கவேண்டாம். உங்க குறிப்புகள் செய்துகொண்டிருக்கிறேன். தொடர்ந்து வரும். உங்க கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றிகள்.

      Delete
  14. மூன்று வருடங்கள்! வாழ்த்துக்கள் ப்ரியா. மேலோட்டமாகத்தான் வாசித்தேன். நாளை திரும்ப வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இந்த பக்கமே வாறதில்லை. வந்தாலும் ஓடிர்றது. இனி ஸ்ராப தரவேணும்.
      நன்றி இமா. உங்க பிஸி!!??டைமிலும் வந்து வாழ்த்தியமைக்கு.

      Delete
  15. அருமைத்தோழி ப்ரியசகிக்கு நல்வாழ்த்துக்கள்.நன்றி பகிர்வுக்கு.மிக்க மகிழ்ச்சி.படங்கள் அழகோ அழகு. பார்க்கவே சுவையோ சுவை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆசியா. உங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள்.

      Delete
  16. ஆஹா.. வகை வகையா சமையல் படங்கள்... பாரக்கும் போதே பசி எடுக்குதே !!!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி உங்க முதல்வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  17. [co="Crimson"]இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பிரியசகி!

    அன்பால் அகம்நிறைத்த அம்மு! நலமொடு
    இன்பம் நிறைவாழ்வை எய்து!

    இன்றுபோல் உம்வாழ்வு என்றும் மிளிரட்டும்
    நன்மைகள் சூழ்ந்திடவே நன்று!

    கண்ணன் அருளினால் காலமெலாம் நீமகிழ
    என்றனுளம் வேண்டும் இரந்து![/co]

    ReplyDelete

 
Copyright பிரியசகி