RSS

16/10/2012

சுகந்தி "பூ"

                                                  
                                                  
             herzlichen-glueckwunsch-0034.gif from 123gifs.eu Download & Greeting Card



 இளமதிக்கு  என் இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.
 நோய் நொடியின்றி  தேகாரோக்கியத்துடனும் , நீண்ட ஆயுளுடனும் ,சந்தோஷமாக வாழ   வாழ்த்துக்கள். 
(தகவல் தெரிவித்த அதிராவுக்கு என் நன்றிகள்.)
***************************************************
சுகந்தி "பூ"

  பூக்களை விரும்பாத ஆட்களே இல்லை.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருபூக்களோ,பலபூக்களோ பிடிக்கும்.அம்மாதிரித்தான் எனக்கும் எல்லாப்பூக்களும்பிடிக்கும்.அதில் ரோஜா, செவ்வரத்தை மல்லிகை ரெம்ப பிடிக்கும்.நித்தியகல்யாணிப்பூவில் மாலை கட்ட அழகாக(வரும்)இருக்கும்.
                                      tks.gg
    
   சின்ன வயதில் புத்தகம் ஒன்றில் நான் முதன் முதலாக சூரியகாந்திப்பூவைப்பார்த்தேன். அதில் இருந்து  எனக்கு அந்தபூவில் விருப்பமாக  இருந்தது.. எங்க  ஊரில நான் பார்த்த ஞாபகம்  இல்லை. அங்கு இருந்திருக்கலாம். ஆனா எனக்கு தெரியாது. எனக்கு அந்தப்பூவ ரெம்ப பிடிக்கும். பெரிய பூ . கண்கவரும் மஞ்சள் நிறத்தில் நடுவில் மண்ணிறத்தில் மகரந்தங்கள் பார்க்க அழகா இருக்கும்.

     இங்கு  வந்து எனக்கு அம்மரம் வைக்கவேணும் என்று  ஆசை. முதல் நாங்கள் இருந்த இடத்தில் வைக்கமுடியவில்லை . கடைகளில் மரமாகவும், விதைகளை  பாக்கெட்டுகளிலும் வைத்து விற்றிருப்பதை கண்டிருக்கிறேன் . வீடு மாறுவது என்ற நிலை வந்தபோது ஒரு பாக்கெட் வாங்கிவிட்டேன்.

                                           tks.gg
    நாங்க  வீடு குடிவந்த புதிதில்  வாங்கிய, விதைப்பாக்கெட்டை பொருட்கள் அடுக்குவதில் எங்கேயோ கை மாறிப்போச்சு. பின் தேடியதில் காணவில்லை. நானும் அதை மறந்துவிட்டேன். ஆனால் என்கணவருக்கு வாங்கியது  ஞாபகம் இருக்கு. கடைகளில் புதிசா வாங்கப்போனால்,உடனே சொல்வார், ""பழையதை தேடி எடுங்கோ. இல்லையென்றால் பிறகு வாங்கலாம்"" என்று.  நானும் தலையாட்டிவிட்டு வருவேன். பிறகு எதையாவது தேடும் போது, அதை ஞாபகம் வைத்து தேடுவேன். கிடைக்காது.விட்டுவிடுவேன். எனக்கும் சூரியகாந்திப்பூவுக்கும் பொருத்தமில்லைப்போலும். பின் நானும் தற்காலிகமாக அதை மறந்தேபோனேன்.

    இம்முறை நான் ஊருக்கு போயிருந்தபோது, சூரிய‌காந்திப்பூவை கண்டதும்  எனக்கு பழையபடி வேதாளம் சூரியகாந்தி மரத்தில ஏறிட்டுது. நான் உடனேயே முடிவெடுத்துதான் இங்கு வந்தேன். போனதும் முதல்வேலையா இந்தபூமரம் வைக்கிறது என்று. அங்கிருந்தே இவரிடம் விசயத்தையும் சொல்லியாச்சு. அவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. மெளனம் சம்மதமே என நானே எடுத்துக்கொண்டேன்.
    அதோடு சூரியகாந்தி மரம் நடுவதென்றால் ஏப்ரல்,மே தான் நடவேண்டுமாம். இங்கு நான் வந்ததும் எனக்கு வைரஸ் காய்ச்சல் பிடித்துக்கொள்ள,அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று நாட்களும் போய்விட, பின் மகனுக்கும் சிறுவிபத்து நடந்து, அந்த   ஜுன் நடுப்பகுதி வந்துவிட்டது. எனக்கு இம்முறையும் பலனில்லை என விட்டுவிட்டேன்.

      பின் ஒருநாளில் கார்டனில் துப்பரவாக்கும் சமயம் ஒரு மரம் வளர்வதைக்கண்டு நான் இவரிடம் சொன்னேன், அவர் அதை பிடுங்கி எறியுங்கோ எனச்சொல்ல, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் என் உள்ளுணர்வு சொல்லிச்சு. இது சூரியகாந்திமரம்தான் என்று. ஆனால் இவருக்கு அந்த மரம் வளர்ந்த இடத்தில் ஒன்றும் வளரக்(க)கூடாது.   என்னிடம்   நீங்க ஏதாவது seeds போட்டீங்களா? என்று கேட்டார். நான் சொன்னேன். "இல்லையே" என்று. அப்ப நீங்க நினைக்கிறமாதிரி அந்த மரமில்லை பிடுங்கி எறியுங்கோ என்று.  நான் உடனேயே சொன்னேன்."கொஞ்சநாள் விட்டுப்பார்ப்போம் சூரியகாந்திமரம் இல்லையென்றால் பிடுங்கி எறிகிறேன் என்று. ஒருமாதிரி அதை காப்பாற்றி வந்தேன். என்னுடைய நம்பிக்கையில‌, என்ன மரம் என்றுதான் பார்ப்போமே என்ற எண்ணம் பின் இவருக்கும் வந்துவிட்டது.
     எனக்கோ ஒரே வியப்பு. மனம் சொல்லுது. அது நீ ஆசைப்பட்ட‌ சூரியகாந்திப்பூமரம்தான் என்று. ஆனால் இது எப்படி இங்கு? அதுவும் இவ்வளவு இடம் இருக்கேக்கை.ஒரு ஓரமா? அதுவும் நல்லதுக்குதான் நடுவில வளர்ந்திருந்தா கட்டாயம் இவர் புல் வெட்டேக்கை பிடுங்கி எறிந்திருப்பார். எல்லாம் நன்மைக்கே என நினைத்து, அந்தமரம் என்னவென்று தெரியாமல் உரம்(ஒரு உள்ளுணர்வைக்கொண்டு) போட்டு வளர்த்து விட்டேன்.
    நான் சூரியகாந்திப்பூவை பார்த்திருக்கிறேன். மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இது அந்த மரம்தானா என்பதை அடுத்ததெருவில் ஒரு  வீட்டில் வளர்ந்த சூரியகாந்தி மரத்தின் இலையை பிடுங்கி வந்து இந்த இலையோடு பொருத்தி பார்த்து , இது அந்த மரம்தான்  என்று,கணவரைக் கூப்பிட்டுக்காட்டினேன்.அதன் பின் ஒப்புக்கொண்டார்.

     பின்பு மரம்  பெருசா வளர எனக்கு சந்தோஷத்துடன் கூடிய அதிர்ச்சி. எப்படி இது வந்தது ? இன்னமும் தெரியவில்லை. ஆனா  அந்த க்ரில் கல்லில் பறவைகள் வந்து இருப்பார்கள். ஒருவேளை அவர்களால் இந்த மரம் கிடைத்திருக்கிற‌து போலும்." நான் அவர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு நன்றிக்கடனா இவ்வுதவி செய்தார்கள்", என கணவர் சொல்கிறார்.!! எது எப்படியோ
    இப்ப அந்த மரம் வளர்ந்து, என் ஆசையை நிறைவேற்றிவைத்து. பூக்கள் பூத்துவிட்டன.
                             இந்த பதிவின்போது நிறைய பூக்கள்  பூத்துவிட்டது 

   சின்னதில் சூரியகாந்தி என சொல்லவராமல் "சுகந்தி"ப்பூ  என்று சொன்னது  என் மகன்.
_____________________________________________________
_____________________________________________________

                                                       tks.net 
------------------------------------------------------------------- 
இளமதிக்கு இப்பாடல் 

                      
----------------------------------------------------------------------                                              

67 comments:

  1. //இளமதிக்கு என் இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி தேகாரோக்கியத்துடனும் , நீண்ட ஆயுளுடனும்,சந்தோஷமாக வாழ
    வாழ்த்துக்கள். //

    அதே அதே ... ததாஸ்து.

    அன்புள்ளம் கொண்ட நம் இளமதிக்குன்
    என் மனமார்ந்த ஆசிகளும், அவங்க
    பிறந்த நாளுக்கு என் இனிய வாழ்த்துகளும்.
    நீங்களே சொல்லிடுங்க, அம்முலு.

    தகவலுக்கு நன்றிகள்

    அன்புடன்
    கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அவங்க பார்ப்பாங்க அண்ணா.வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

      Delete
  2. //எனக்கு அந்தப்பூவ ரெம்ப பிடிக்கும். பெரிய பூ . கண்கவரும் மஞ்சள் நிறத்தில் நடுவில் மண்ணிறத்தில் மகரந்தங்கள் பார்க்க அழகா இருக்கும்.//

    ஆமாம். மிகவும் அழகாக இருக்கும். பெரிய பூ. கண்கவரும் மஞ்சள் நிறம். நடுவே மகரந்தம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? உங்கள் ரசனையே எனக்கும். அது எனக்கும் ரொம்பவே பிடிக்கும்.

    தொடரும்..

    ReplyDelete
    Replies
    1. ஆனா இப்ப அந்த பூக்களில் உள்ள மகரந்தங்களை குருவிகள் விட்டுவைக்கவில்லை. உங்களுக்கும் பிடித்ததையிட்டு மகிழ்ச்சியே.

      Delete
  3. //நீங்க ஏதாவது seeds போட்டீங்களா? என்று கேட்டார்.//

    மரியாதை கொடுத்துப்பேசும் நல்ல அன்பான கணவர்.
    அவருக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துகள். ;)))))

    //" நான் அவர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு நன்றிக்கடனா இவ்வுதவி செய்தார்கள்", என கணவர் சொல்கிறார்.!! எது எப்படியோ இப்ப அந்த மரம் வளர்ந்து, என் ஆசையை நிறைவேற்றி வைத்து. பூக்கள் பூத்துவிட்டன.//

    ஆஹா, அது தான் நம் அதிர்ஷ்டம்.

    கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும்.
    இதைக் கேட்கும் என் மனதிலும் சந்தோஷப்பூக்கள் இப்போது பூத்து விட்டன. பாராட்டுக்கள். ;)))))))

    தொடரும்....

    ReplyDelete
    Replies
    1. சிலவேளை குருவிகள் நிறையவே வந்துவிடுகின்றன. அந்நேரம் கஷ்டமாக இருக்கும்.கொஞ்ச நேரத்துக்கே என நினைத்து அப்படியே விட்டுவிடுவேன்.
      பாராட்டுக்கும்,வாழ்த்துதலுக்கும் ரெம்ப நன்றி அண்ணா.

      Delete
  4. சூர்யகாந்திப்பூ = சு க ந் தி ப் பூ

    ஆஹா! இந்தப்பெயரும் ஜோர் தான்.

    இதைச்சொன்ன தங்கள் மகனுக்கு ஒரு ஜே !

    தொடரும்....

    ReplyDelete
    Replies
    1. சிறுவயதில் மழலையில் அவர்கள் பேச்சே ரசிக்கும்படியாகவும்,அழகாகவும் இருக்கும்.மிக்க நன்றி

      Delete
  5. அவ்வ்வ்வ்வ்வ் அதெப்பூடிக் கோபு அண்ணன் முதலாவதா வரலாம்ம்.. நோ.. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல்:) இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்ன்ன்ன்:))).. மீ தான் 1ஸ்ட்டூ:))

    ReplyDelete
    Replies
    1. மீ தான் 1ஸ்ட்டூ// அதே..அதே

      Delete
  6. வை.கோபாலகிருஷ்ணன்October 16, 2012 9:34 AM
    //இளமதிக்கு என் இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி தேகாரோக்கியத்துடனும் , நீண்ட ஆயுளுடனும்,சந்தோஷமாக வாழ
    வாழ்த்துக்கள். //

    அதே அதே ... ததாஸ்து.//

    உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இதுக்கு கொப்பி வலது இல்லைப்போல:)).. அதே..அதே... ததாஸ்து!!!!

    ReplyDelete
  7. ம்ம் சூரிய காந்திக் கதை அருமை, என் வீட்டுச் சூரியகாந்திக் கதையும் முன்பு சொல்லியிருக்கிறேனென்ல்லோ.. இம்முறையும் அம்மா வந்து நின்றபோது, அதே மரம் எப்படியோ முளைத்து முடிவில் அது சூரியகாந்தியேதான் எனக் கண்டு பிடித்தோம்.

    இது எனக்கு விருப்பமில்லை, ஏனெனில் சூரியகாந்து வீட்டு வளவில் நடக்கூடது, நல்லமில்லை என்பினம் ஊரில், சரிபிழை தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. தொடரும்...

      உஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கும் கொப்பி வலதில்லை:) பயப்பூடாமல் எழுதலாம் ஜாமீஈஈஈஈஈஈ:))

      Delete
    2. மீ..... எஸ்கேப்..... போட்டு தப்பிச்செல்லும் முன் வந்து கரெக்டா பிடிச்சுட்டாங்களே .................

      அஞ்சூ உடனே ஓடி வந்து காப்பாத்துங்க.... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........................

      அம்மாடீ, பிடின்னா சும்மா என்னா பிடி ....
      உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
      வேர்த்து விறுவிறுத்துப்போச்சு.

      Delete
    3. ஹா...ஹா...ஹா... இதுக்கே இப்பூடி வேர்த்தால்? இன்னும் இருக்கு ஆனா டைமில்லையாக்கும் மீக்கு இப்போ:)).. அஞ்சூஊஊஊஊ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:) எனக்கல்ல கோபு அண்ணனுக்கு:)

      தொடரும்.....:)

      Delete
    4. எனக்கும் இது பற்றி தெரியாது.அதிரா. ஆனால் நான் நடவில்லை. அந்த வாங்கிய பாக்கெட்டை இன்னும் எடுக்கவில்லை. இது நான் குருவிகளுக்கு சாப்பாடு வைக்கிறனான். அவைகள் மரத்துக்கு பக்கமாக உள்ள க்ரில் கல்லில் உட்காருவினம். அதனால் வந்திருக்கலாம்.அவைகலின் சாப்பாட்டில் பலவித பருப்புகள் சேர்ந்ததுதான்.அதனால்தான் என்னவோ தடைப்பட்டது.

      Delete
  8. // இளமதிக்கு இப்பாடல் //

    என்று தாங்கள் கொடுத்துள்ளது மிகவும் அருமையானது.
    பொருத்தமானது.

    ’நிலவு’ தூங்கும் குங்குமச்சிமிழாக ’யங்க் மூன்’க்குப் பொருத்தமானதாக உள்ளது. பாடல் காட்சிகளும் அபாரம்.
    மிக நல்லதோர் தேர்வு. நாங்களும் காணச்செய்துள்ளதற்கு
    நன்றியோ நன்றிகள்.

    மொத்தத்தில் இந்தத்தங்களின் பதிவு தங்கமோ தங்கம்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிவைப்பற்றிய மெயில் தகவலுக்கும், இணைப்பு கொடுத்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அதிரடி அதிரா வருவதற்குள் .... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து,ரசித்து,வாசித்து தங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
    2. கோபு ஐயா சொன்னது போலவே எனக்கும் இப்பாடல் ரொம்பவே பிடிச்சிருக்கு. இங்குதான் நான் காட்சியும் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மு!

      Delete
  9. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSIzHRIDIhU1C3Nlp-bD8Zs5eHlltGzXovSRlPMEHnkAWiv8Eh7[/im]

    happy birthday ilamathi

    ReplyDelete
  10. வந்தாச்சா.உங்களை பூஸார் தேடினார் அஞ்சு.

    ReplyDelete
  11. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSFXYjK_dddGp4FrQABbWx63FfPI3q3Jn955HM9aNYJybeT0qAYVw[/im]

    இவங்கதான் உங்க ஆசையை நிறைவேத்தி இருக்காங்க ப்ரியா

    ReplyDelete
    Replies
    1. yes.பார்க்கவே கொள்ளை அழகு. என் கிச்சன் வாசலில் நின்று இவர்களையே பார்ப்பேன்.பக்கத்துவீட்டில் நிறைய்ய்ய் வளர்க்கிறார் ஒரு ஓபா(opa)
      இவர்களை நாள்முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

      Delete
    2. அழகான கிளிகள் அஞ்சு! இவை ஜோடிக்கிளிகள்! நாங்களும் முன்பு வீட்டில் வளர்த்திருந்தோம். ஒரு வின்ரர் நேரம் ஆண் கிளி நோய் வந்து இறக்க பெண் கிளி ஓயாமல் கத்திக்கொண்டிருந்து சரியாக 1 மாதமிருக்க ஒரு நோயும் இல்லாமலே ஏங்கி அதுவும் போய்ச் சேர்ந்திட்டுது:’(

      ரொம்பக் கவலையாகிப் போனேன். பெண் கிளி எங்கள் கையில் வந்து இருக்கும். கூடு பூட்டுவதில்லை. அவையாக வெளியே வந்து மீண்டும் உள்ளே போய் இருப்பினம். ம்ஹும் நினைக்க கவலையா இருக்கு.....

      Delete
  12. இந்த பூ :)) ஒரு பிரபல பதிவர் கிச்சனில் வளர்த்த ஃபேமஸ் பூவாசே

    ஹா ஹா ..மறக்கமுடியுமா :))))

    ReplyDelete
    Replies
    1. அதுதானே!! அதுவும்... ;))))))))

      Delete
    2. ஏன் இங்கு மழை என யோசித்தேன்.இமா வந்திருக்கிறாக.வாங்கோ. நன்றி

      Delete
    3. தொடர்ந்திருக்கிறேன். ;) http://imaasworld.blogspot.co.nz/2012/10/blog-post_5916.html

      முகநூலில் தங்கள் பார்வைக்காகச் சில 'முக்கிய' தகவல்கள் காத்திருக்கின்றன. மறக்காமல் பார்வையிடவும். ;)

      Delete
    4. தகவலுக்கு நன்றி.

      Delete
  13. மீண்டும் வருவேன் ....கொஞ்ச நேரத்தில்

    ReplyDelete
    Replies
    1. என்ன அஞ்சு உங்களுக்கும் வேர்க்குதோ?:)) ஹா..ஹா..ஹா...:))

      Delete
  14. எனக்கிண்டைக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈஈஈ:)) நன் தான்ன்ன்.. இங்கின முதல்ல்ல்ல் ஃபலோவரக இணைஞ்சிருந்தேன், ஆனா இப்போ என்னை நீக்கிப்போட்டினம்.. காணல்லியே.... இனி நாங்க இணையமாட்டோம் என்பதனை சபையோர் சாட்சியக, அஞ்சு சாட்சியாக, கோபு அண்ணன் சாட்சியகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்ம்:))..

    பூஸோ கொக்கோ ம்ஹூம்..:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி அதிராவை நீக்கிவிட்டு கோபு அண்ணன் படத்தை இரண்டு தடவை சேர்க்க முயற்சி நடக்குது,

      நல்லாப் பாருங்கோ அதிரா.

      நான் பொய் சொல்லவில்லை.

      ஏற்கனவே Follower ஆகியுள்ள என்னை மீண்டும் உள்ளே நுழைக்க TRY பண்றாங்கோ, அம்முலு.

      என்னை எல்லோருக்குமே பிடிச்சிருக்கு.
      ஐயா ஜாலி தான். ;)))))

      [ஆனாக்க என்னை எனக்கே பிடிப்பதில்லை,
      அதுதான் கொஞ்சம் வருத்தம். ;(]

      Delete
  15. நானே உங்களிடம் கேட்க இருந்தேன் அதிரா.ஏன் நீங்க பாலோவரா சேரவில்லை என்று. உண்மையாலும் நான் நீக்கவில்லை.

    ReplyDelete
  16. அம்மூஊஊஊஊஊ.......
    நன்றிம்மா! நன்றி! மிக்க நன்றி!!!
    என்னதிது எல்லாருமா சேர்ந்து இண்டைக்கு என்னை ஒரு வழி பண்ண வெளிக்கிட்டீங்கள். அவ்வ்வ்வ்வ்:)))
    ஐயோ வெட்கமா இருக்குதெனக்கு;)

    வாழ்த்திற்கும் பாடலுக்கும் ரொம்ம்ம்ப ரொம்ப நன்றி!
    எனக்கும் பிடிச்ச பாட்டுத்தான். நல்ல பாட்டு. அங்கையும் வாங்கோ பூ எடுத்துக்கொள்ளுங்கோ:))

    [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSGhulv5LvoSb1WvMPJoBAva6skdIO27kap45JCgcpNXClp5NWOiA[/im]

    இங்கையும் என்னை வாழ்த்திய உங்களுக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete
    Replies
    1. //ஐயோ வெட்கமா இருக்குதெனக்கு;)// !! இது என்ன கலியாண நாளா! பிறந்தநாள்தானே! ;)

      அன்பின் இளமதிக்கு இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்.

      Delete
    2. வாழ்த்திற்கு மிக்க நன்றி இமா!!!
      இளமதிக்கு எதுக்கு எப்ப வெட்....கம் வருமென தெரியாதூஊஊ;)))))

      Delete
  17. அம்முலு !!! அழகான பதிவு ......எங்க கார்டன்ல ஒன்று வளர்ந்தாது ,பூ சரியா வரதுக்குள்ள விண்டர் மழை வந்து செடி போச்சு ..
    நானும் ஒருமுறை எதையோ வீச ..ஒரு அழகான செடி உயரமா வந்தது

    என் கணவர் அது எதோ வீட் என்று பிடுங்கி வீசினார் ,,அது காய காய ஒரு வாசனை தொட்ட முழுதும் ...அவ்வவ் கடசில பார்த்தா அது சோம்பு செடி விதி:((( வீசிருக்கோம் ..

    ReplyDelete
    Replies
    1. விதை :))) விதியாகி விட்டது

      Delete
    2. ஐயோ சோம்புச்செடியா?????? வீணாய்ப்போச்சே:(

      //விதை :))) விதியாகி விட்டது//
      அருமை உங்க எழுத்தைச் சொன்னேன்:))))

      Delete
  18. //இமாOctober 17, 2012 5:19 AM
    //ஐயோ வெட்கமா இருக்குதெனக்கு;)// !! By இளமதி.

    இது என்ன கலியாண நாளா! பிறந்தநாள்தானே! ;)
    By இமா

    அன்பின் இளமதிக்கு இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்.
    By இமா//

    அதானே இமா டீச்சரே கரெக்டா சொல்லிட்டாங்க.

    பிறந்த நாளுக்கு வெட்கப்படவே கூடாது.

    கல்யாண நாளா இருந்தா மட்டும் அதுவும்
    கணவர் மட்டுமே வெட்கப்படவேண்டும். ;)))))

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  19. அந்த 11 ஆவது கமெண்டிலே
    நிர்மலா படம் காட்டியுள்ளது
    எனக்கு ரொம்ப புய்ய்ச்சிருக்கு*.

    அந்த 11 பறவைகளும் அய்ய்கோ அய்ய்கு*.
    கட்டிப்பிடிச்சுக் கொஞ்சணும் போல ஆசையா
    இருக்கு. அவை கொள்ளை அய்ய்கு*.

    =====================================
    *ஊசிக்குறிப்பு:
    [*கொப்பி வலது+இடது+கீழே+மேலே]

    *இந்த அதிரடி அதிராவோடு பழகி
    எனக்கு தமிழே மறந்து போச்சு.
    இமா *றீச்சர் என்னை மன்னிக்கோணும்.
    ======================================

    ReplyDelete
  20. ஆஆ லாண்டட் again :))

    சுகந்திப்பூ :)) சின்ன பிள்ளைகள் மழலையில் பேசுவதே ஒரு தனி அழகு ...
    என் மகளும் சிறு வயதில் சொன்ன வார்த்தைகள் ..
    idli.....italy
    சட்னி .......கட்னி
    பியூலா .....பில்லா
    தாத்தா ..காக்கா
    இப்பவும் தொடர்பவை ..

    வடிவேலு ....வாலுவேடு

    ReplyDelete
    Replies
    1. என் மகனுக்கு த,ர,ற வராது.தருவீங்களா என்பதை கிடைக்குமா?அல்லது வருமா என்பார். இப்பவும் இன்னும் டொச் கலந்த தமிழ்.இடியப்பத்தை தமிழ் நூடுல்ஸ் என்பார்.

      Delete
  21. 6543210 இதில் எல்லாம் அருமையான விளக்கம் :))

    ReplyDelete
  22. அடுத்ததெருவில் ஒரு வீட்டில் வளர்ந்த சூரியகாந்தி மரத்தின் இலையை பிடுங்கி வந்து இந்த இலையோடு பொருத்தி பார்த்து , இது அந்த மரம்தான் ///

    நல்லவேளை அந்த வீட்டுக்காரங்க நீங்க இலையை பிடுங்குவதை பாக்கல்லை [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQxt-djJgOPG4thl5oTs-HLvqKgEr5Fx5Ok4qMBcLPlkzdRyoAjpAலை :)))))[/im]

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற அங்கு 3 நாய்கள் இருக்கு. அதற்கு பயந்துததுதான் அதிகம்.frau நல்லவா. ஆனா அவா வேறாக சென்றுவிட்டா.. மகள் என் மகனுடன் படிப்பதால் நியூஸ் தெரிந்தது.இதெல்லாம் இங்க சாதாரணம்.

      Delete
  23. [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ6RDL4BuCP3pZ5q_nC5dOQmesryDTkQBVzRaOsO6a6cYL5TTgp7w[/im]

    bye :)))

    ReplyDelete
    Replies
    1. இன்று பாஸ்தா தான் எங்கள் வீட்டில் எப்படி தெரியும் அஞ்சு??கரெக்ட் ஆ படம் போட்டிருக்கீங்க

      Delete
  24. அம்மு... இம்முறை பூ பற்றிய அருமையான நல்ல பல தகவல்கள் அனுபவங்கள்:)

    நீங்க சொல்லுறபோல நித்யகல்யாணி மணமில்லாவிட்டாலும் அழகோ அழகுதான். மாலை சரம் கட்டி ஸ்வாமி படத்துக்கு போடேக்கை அருமையா இருக்கும். அதோடை இடைக்கிடை நொச்சி இலை அதுவும் வைச்சு கட்டினா பச்சையும் வெள்ளையுமா மாறி மாறி வரேக்கை பார்க்கவே ரம்யமா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி. ம்.. அழகுதான். இப்பூவைப்பார்த்தால் எனக்கு முதன்முதல் மாலை கட்டியதும்,கிடைத்த பாராட்டும் மறக்கமுடியாது.மாலை கட்டுவது இப்பூவில் ஈஸி.

      Delete
  25. சூரிய காந்தி அதுவும் அழகுதான். அது சூரியன் நிக்குற பக்கமெல்லாம் வளைஞ்சு திரும்பி பார்க்கிறதும் சொல்லமுடியாத அழகுதான்.

    அதிரா சொன்னமாதிரி வீட்டுத்தோட்டத்தில் சூரியகாந்தியை வைக்கப்படாது எண்டு சொல்லுறதை நானும் கேள்விப்பட்டிருக்கிறன். ஊரில் எங்கள் வீட்டிலும் நாங்கள் வைச்சிருக்கேல்லை.

    ReplyDelete
  26. எனக்குப் பிடிச்ச பூவெண்டா அது மல்லிகைதான். அதன் மணமே ஆளை மயக்குமே:)))
    இரண்டாவது பிங்றோஸ் அழகோ அழகு. ஒத்தைப்பூவை பின்னிய ஜடையில் வைச்சு பத்துத்தரம் விழுந்துபோச்சோ இருக்கோ எண்டு தொட்டு தொட்டு பார்ப்பேன்:))))

    சூரியகாந்தியை உங்க வீட்டுத்தோட்டத்தில் வைச்சு உண்டாக்கிய அனுபவப் பகிர்வு நல்லா இருக்கு.

    உங்க குட்டிப்பையன்:) மழலைத் தமிழும் அதைவிட சூப்பர். வாழ்த்துக்கள் அம்மூஊஊஊ:)))

    ReplyDelete
    Replies
    1. இப்பூக்களை எனக்கும் பிடிக்கும்.மல்லிகை என்றால் வீட்டில் இருக்கும் மல்லிகை பந்தல்தான் ஞாபகம் வருகிறது.
      அவர் இப்ப டீனேஜ்(13) ஆகிட்டார். இதைக்கேட்டால் வெட்கப்படுவார்.ஆனால் இப்பவும் சிலது மாறவேஇல்லை.
      ரெம்ப நன்றி இளமதி.

      Delete
  27. யங் மூனுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேத்திக்கு பர்த்டே நல்ல்லா கொண்டாடி இருப்பீங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீரி,ஆ இது அதிராவின் கொப்பி வலது. வாங்கோ கிரி.முதல் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  28. அம்முலு அழகான பதிவு. சூரிய காந்தி பூ அழகா இருக்கு. இப்புடி கஷ்டபடாம செடி வளர்ந்து இருக்கு பாருங்க. என் பையன் ஸ்கூல் இல் ஒரு தடவை சூரிய காந்தி செடி வளர்த்து வீட்டுக்கு எடுத்திட்டு வந்து நட்டான். அதுக்கு அப்புறம் ஏனோ இந்த செடி வீட்டில் வைக்கல. அடுத்த ஏப்ரில் இல் வெச்சிட்டு வேண்டியதுதான். உங்க குட்டி பையன் மழலை அருமை.


    என்னையும் பூஸ் போல follower லிஸ்ட் இல் இருந்து delete பண்ண மாட்டீங்கன்னு அதே பூஸ் தலையில் அடிச்சு:)) சத்தியம் பண்ணினால் தான் நான் உங்க போல்லோவேர் ஆஆவேன் சொல்லிட்டேன் :))

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி கிரிஜா.
      சரி எதுக்கும் அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க.

      Delete
  29. //வீடு மாறுவது என்ற நிலை வந்தபோது ஒரு பாக்கெட் வாங்கிவிட்டேன்.//

    இந்த வரிகளுக்குக்கீழே காட்டப்பட்டுள்ள [tks.gg] படத்தில் உள்ள இரண்டு சூரியகாந்திப் பூக்களும் அசப்பிலே எட்டு [ 8 ] போட்டது போல அழகாக உள்ளது.

    ReplyDelete
  30. சூரிய காந்தி அதுவும் அழகுதான். அது சூரியன் நிக்குற பக்கமெல்லாம் வளைஞ்சு திரும்பி பார்க்கிறதும் சொல்லமுடியாத அழகுதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க விஜி.உங்க முதல் வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள்.

      Delete
  31. [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTGYOQ1agGp-Jca8NTYaJIJXcYLegQ81aP3g6JH9vAPe1hvEWlXcg[/im]

    கீச் :))கீச் :)) ??? எப்ப அடுத்த போஸ்ட்

    ReplyDelete
  32. சின்னதில் சூரியகாந்தி என சொல்லவராமல் "சுகந்தி"ப்பூ என்று சொன்னது என் மகன்.//

    குழந்தையின் மழலையும் பூக்கள் போலவே ரசிக்கவைத்தது...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றியம்மா வந்து கருத்தளித்தமைக்கு.

      Delete

 
Copyright பிரியசகி